scanman’s posterous

stuff that's too long for twitter & not really apt for my blog 
Filed under

tamil

 

vettaikkaran story

(note to my non-tamil friends & visitors: this is an imaginary version of the story of a yet to be released tamil movie)
visai goes to forest for hunting deer. he sees anushka trapped inside a tiger's cave. tiger sees him and starts to chase him. visai goes fast in tvs champ with the song "puli urumuthu puli urumuthu" in the background. then he escapes from the tiger confusing it by turning right after putting left indicator. a coconut falls on his head. at that time a song "en uchi mandaila surrungudhu." the wily tiger blocks him by getting ahead of him via a jungle short cut. now visai sings the full song "naan adicha thaanga maatta," hearing which the tiger dies of fright. visai saves anushka and both sing the song "karikalan kaala pola." then both escape from the forest.
eppudi...?! :)

Loading mentions Retweet
Filed under  //   humour   movies   tamil  

Comments [2]

amazing how new media works

i'm constantly amazed at how something as frivolous as twitter can lead to some amazing stuff.

thanks to my twitter pal sridhar, i play an anonymous cameo role (a pivotal role, in his words) in an interesting short story that he wrote in his tamil blog. all thanks to a story of a rare heavy metal toxicity that i found in the new york times (via twitter again) that i tweeted about.

it's a great story, a typical work of rajeshkumar style tamil pulp fiction.

Loading mentions Retweet
Filed under  //   blogs   fiction   friends   medicine   news   other bloggers   tamil   twitter  

Comments [1]

பயணம்


ஆசை பல கொண்டு வண்ணக்கனவுகளுடன்
அடி எடுத்து வைத்தாள் தன் திருமண வாழ்வினுள்.
இல்லை என்ற எண்ணமே தோன்றாமல் வளர்த்த பெரியோர்கள்.
உங்களிடம் தான் இல்லை என்று குறுக வைத்த புகுந்த இட மனிதர்கள்.
வசை, குறை, ஏளனம், படோடாபம், ஆணவம் நிறைந்த
இடத்திலிருந்து தவித்து பிரிந்து வந்தவளுக்கு
தனக்கென ஒரு வாழ்வு அமையுமா என்ற ஐயத்தின் நடுவே
வழி நெடுக வந்த நண்பனையும், சுமந்த தெய்வத்தையும் 
மீறி ஈர்க்கிறது ஆன்மிகம்.
அதன் பாதையில் காலடி வைக்கையில், மீண்டும்
வசை, குறை, ஏளனம், படோடாபம், ஆணவம்
தலை நீட்டி அவளைப் பார்த்து எள்ளி நகையாடின,
நீ பொறியில் சிக்கிய எலி.

[இது நான் எழுதியது அல்ல. கவிதை எழுதுவதில் என் மனைவியின் முதல் முயற்சி]

Loading mentions Retweet
Filed under  //   poetry   tamil  

Comments [0]

surendra's cartoon - நெத்தியடி

நேத்து கடைக்கு போயிட்டு வந்ததும் அம்மணி சொல்லிச்சி, ஆறு மாசம் முன்னே 50 ரூபாய்க்கு கிடைத்த துவரம் பருப்பு இப்ப 98 ரூபாய் ஆயிருச்சாம்.

சாதாரணமான குடும்பங்களெல்லாம் எப்படியய்யா தினசரி வாழ்க்கை நடத்த முடியும் :(

Loading mentions Retweet
Filed under  //   cartoon   india   news   opinion   tamil  

Comments [3]

பணிதல்

[நண்பர் சுந்தர் அனுப்பிய மினஞ்சலிலிருந்து]

மௌரிய சாம்ராஜ்யத்தின் மன்னர் அசோகர் வீதிஉலா வந்துகொண்டிருக்கும் போது, எதிரில் ஒரு புத்த பிட்சு வருவதை பார்த்து, ரதத்தை விட்டு இறங்கி சென்று புத்த பிட்சுவின் காலில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்தார். அவரது சிரம் துறவியின் காலில் பட்டது. துறவி தனது கைகளை உயர்த்தி மன்னனை ஆசீர்வதித்தார்.

இதைப் பார்த்த அமைச்சர், சங்கடப்பட்டு, "ஒரு மண்டலாதிபதி ஒரு பரதேசியின் காலில் விழுவதா? அரச பாரம்பரிய கௌரவம் என்னாவது?" என்று மன்னரிடம் வினவினார்.

அசோகர் சிரித்தார். கேள்விக்கு பதிலளிக்காமல் ஒரு விசித்திர கட்டளையை பிறப்பித்தார்.

"ஒரு ஆட்டுத் தலை, ஒரு புலி தலை, ஒரு மனித தலை, மூன்றும் எனக்கு உடனே வேண்டும். ஏற்பாடு செய்யுங்கள்" என்று.

ஏவலர்கள் நாற்புறமும் பறந்தனர்.

ஆட்டு தலை கிடைக்க சிரமமே ஏற்படவில்லை. இறைச்சி கடையில் கிடைத்து விட்டது. புலி தலைக்கு அலைந்தார்கள். அதுவும் ஒரு வேட்டைக் காரனிடம் கிடைத்தது. மனித தலைக்கு எங்கே போவது? கடைசியில் சுடுகாட்டில் இருந்து ஒரு பிணத்தின் தலையை எடுத்து வந்தனர்.

மூன்றையும் பார்த்த அசோகர், தன அமைச்சர்களிடம் கட்டளையிட்டார். "சரி, இம்மூன்றையும் சந்தையில் விற்றுப் பொருள் கொண்டு வாருங்கள்."

ஆட்டு தலை அதிக சிரமமின்றி நல்ல விலைக்கு விலை போனது. புலித் தலையை ஒரு வேட்டை பிரியரான பிரபு ஒருவர் அதனை வாங்கி தன வீட்டில் அலங்காரமாக பாடம் செய்து மாட்டி வைக்க எடுத்து போனார்.

மீதமிருந்த மனித தலையைப் பார்த்த கூட்டம் அருவருப்புடன் அரண்டு மிரண்டு பின் வாங்கியது. ஒரு காசுக்குக் கூட அதை வாங்க ஆளில்லை. அந்த தலையை இனாமாகவாவது கொடுத்து விட முயன்றும், யாரும் வாங்க முன் வரவில்லை.

இப்போது அசோகர் கூறினார், "பார்த்தீரா அமைச்சரே! மனிதனின் உயிர் போய்விட்டால் இந்த உடம்பு கால் காசுக்குக் கூட பெறாது. இலவசமாக கூட இதை யாரும் தொட மாட்டார்கள். இருந்தும் இந்த உடம்பு உயிர் உள்ளபோது என்ன ஆட்டம் ஆடுகிறது! செத்த பின்பு நமக்கு மதிப்பில்லை என்பது நமக்கு தெரியும். ஆனால், உடலில் உயிர் இருக்கும்போது, தம்மிடம் எதுவும் இல்லை என்றுனர்ந்தவர்கள் தான் ஞானிகள். அத்தகைய ஞானிகளை விழுந்து வணங்குவதில் என்ன தவறு?" என்றார்.



எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்தது  [குறள் # 125. அறத்துப்பால் - இல்லறவியல் - அடக்கமுடைமை]

Humility is a precious quality in all people, But it becomes a priceless possession in the wealthy. [Kural #125. Virtue - Domestic Virtue - The possession of self-restraint]

Loading mentions Retweet
Filed under  //   tamil  

Comments [0]

32 கேள்விகள் (தொடர்பதிவு விளையாட்டு)

1) உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?

என் இயற்பெயர் விஜய். சதாசிவம் என் தந்தையின் பெயர். பல வருடங்களுக்கு முன் பாஸ்போர்ட் எடுக்கும்போழுது இனைத்துவிட்டார்கள். விஜய் என்ற குறும்பெயரைவிட வடநாட்டவர் மற்றும் மேலைநாட்டவர்கள் போல் இரண்டு பெயர்காளாக இருப்பது பிடித்திருக்கிறது. எப்போதாவது தொலைபேசியிலோ அல்ல மருத்துவ கூட்டங்களிலோ டாக்டர் சதாசிவம் என்று யாரவது கூப்பிட்டால் வேறு யாரையோ கூப்பிடுவதாக எண்ணியதுண்டு. ஸ்கென்மென் (scanman) நான் வலைப்பதிவு எழுத ஆரம்பித்தபொது வைத்துக்கொண்ட என் தொழிலை குறிக்கும் புனைப்பெயர். 

2) கடைசியா அழுதது எப்போது?

இது என்னங்க கேள்வி! கடைசியா அழுதது பொண்டாட்டி கிட்ட கடைசியா அடி வாங்கிய நாள்தான்!! 

3) உங்களுக்கு உங்க கையெழுத்து பிடிக்குமா?

மை உற்றி எழுதும் பேனா அல்லது ஜெல் பேனாவில் எழுதினால் என் கையெழுத்து பார்க்கும்படியாக இருக்கும். பிடிக்கும்.
பால்பாயின்ட் பேனாவில் எழுதினால் சராசரி மருத்துவரின் கையெழுத்து (அதாவது கோழி கிருக்கல்) ஆகிவிடும். பிடிக்காது.

4) பிடித்த மதிய உணவு?

சாதம், முருங்கைக்காய் சாம்பார், தக்காளி ரசம், கீரை, கொஞ்சம் தயிர், மாங்காய் அல்லது மிளகாய் உருகாய். முடித்தபின், மனைவி அனுமதித்தால் எதாவது ஒரு இனிப்பு. கடலை மிட்டாய் அல்லது தேன் மிட்டாயாக இருந்தால் இன்னும் சந்தோசம். 

5) நீங்க வேற யாருடனாவது நட்பு வெச்சுக்குவீங்களா?

எனக்கு இந்த கேள்வி சரியாகப் புரியவில்லை. முன்பின் தெரியாதவர்களுடன் கூட வலிய போய் பேசி பழகுவேன்.

6) கடல்ல குளிக்கப் பிடிக்குமா? அருவியில குளிக்கப் பிடிக்குமா?

எனக்கு நீச்சல் தெரியாது. அதனால் குளம், குட்டை, ஓடும் நதி, கடல் என்று எதை பார்த்தாலும் குளிக்க தோன்றாது. குளியலறையில் மட்டுமே குளியல்.

7) ஒருவரைப் பார்க்கும்போது முதலில் எதைக் கவனிப்பீர்கள்?

முதலில் கவனிப்பது முக பாவங்களை. என் பார்வைக்கு கோபமாக அல்ல அலட்சியமாக தெரிந்தால் அவர்களுடன் தேவைக்கு ஏற்றமாதிரி மட்டும் பேச்சு வைத்துக்கொள்வேன். 

8) உங்க கிட்ட உங்களுக்குப் பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?

பிடித்தது என்று குறிப்பிட்டு சொல்ல ஒன்றும் இல்லை. பிடிக்காதது பல. அதில் மிக முக்கியமாக பிடிக்காதது என்னுடைய முன்கோபமும் சோம்பேறித்தனமும்.

9) உங்கள் துணைவி கிட்டே உங்களுக்குப் பிடிச்ச/பிடிக்காத விஷயம்?

பிடித்தது - என் மனைவின் சிரித்த முகமும், மருத்துவமனையில் நோயாளிகளோடு இனிமையாகவும் இயல்பாகவும் பழகும் விதம். [சிரிப்பும் இனிமையும் என்னைபார்த்ததும் காணாமல் போய்விடுவதேன்னமோ உண்மைதான்]
பிடிக்காதது - சரியாக படிப்பதில்லை என்று குழந்தையை திட்டுவது.

10) இப்போ யார் பக்கத்துல இல்லாம போனதுக்கு வருந்துகிறீர்கள்?

தற்பொழுது ஆஸ்திரேலியாவில் இருக்கும் என் நண்பன் ஷ்யாம்.  மருத்துவக்கல்லுரியில் ஐந்தரை ஆண்டுகளும் அதற்குப்பின் கோவையில் ஐந்து ஆண்டுகளும் உயிர்தொழர்களாக இருந்த ஞாபகங்கள் தான் மிச்சம் இப்போது.

11) இதை எழுதும்போது என்ன நிறத்தில் ஆடை அணிந்துள்ளீர்கள்?

இளம் பச்சை சட்டையும் கருப்பு ஜீன்சும் (ஞாயிற்றுக்கிழமை அதனால் ஜீன்ஸ்).

12) என்ன பார்த்து/கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்?

வீட்டில் அம்மா, மனைவி மற்றும் மகள் செய்வதையும் சொல்வதையும் வேடிக்கைபார்த்துக்கொண்டும் கேட்டுக்கொண்டும் தமிழ் அஞ்சல் + Google transliterate உதவியுடன் எழுதிக்கொண்டிருக்கிறேன்.

13) வர்ணப் பேனாவாக உங்களை மாற்றினால், என்ன நிறப் பேனாவாக மாற ஆசை?

கருப்பு.
 
14) பிடித்த மணம்?

எலுமிச்சம்பழத்தின் மனம்.

15) நீங்கள் அழைக்கப்போகும் பதிவரிடம் உங்களுக்குப் பிடித்த விஷயம்? அவரை நீங்கள் அழைக்கக் காரணம் என்ன?

நான் அழைக்கபோகும் பதிவர், எனக்கு ட்விட்டரில் அறிமுகமான எங்கூர்க்காரர் டைனொ. அவரிடம் எனக்கு பிடித்தது இரண்டு விஷயங்கள். இரண்டுமே ட்விட்டரில் பார்த்தது. முதலாவது - இந்திய அல்லது அமேரிக்க அரசியலாகட்டும், சினிமாவாகட்டும், இசையாகட்டும், எதுவாக இருந்தாலும் அவருடைய சமயோசிதமான, இரத்தினசுருக்கமான எண்ணங்கள் (ட்விட்டரில் வேறேதும் முடியாதுங்கறது வேறு விஷயம்).  முக்கியமாக இரண்டாவது - இந்த தொடர்பதிவு விளையாட்டை அவர் விளையாடாமல் என் பக்கம் square cut அடித்து விட்டது! Well played, sir :)
இன்னொரு காரணம், ரொம்ப நாளாக அவரது posterous பதிவில் ஒன்றுமே எழுதாமல் இருக்கிறார்.

16) உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவுகளில் உங்களுக்குப் பிடித்த பதிவு?

மேலெ 15-ம் கேள்விக்கு நான் எழுதியிருக்கும் பதிலின் கடைசி வரியை பார்க்கவும்.

17) பிடித்த விளையாட்டு?

நான் படித்த பள்ளிகளிலும், மருத்துவக்கல்லுரியிலும் outstanding player-ன்னு பெயரெடுத்தவன் நான். ஒரு விளையாட்டும் ஒழுங்காக விளையாடத்தேரியாது. தொலைக்காட்ச்சியில் எல்லா விளையாட்டுகளையும் பார்க்க பிடிக்கும்.  சுத்தமாக புரியாத, பிடிக்காத விளையாட்டு என்று கேட்டால் அமெரிக்காவில் football என்று பெயரிட்டு நடக்கும் fancy dress போட்டி. 

18) கண்ணாடி அணிபவரா?

ஆம். சோடாபுட்டி. ஆறாம் வகுப்பிலிருந்து. (இது அப்படியே பாராவின் பதிவிலிருந்து ஈயடிச்சான் காப்பி அடித்தது. எங்களுக்குள் இருக்கும் ஒரே ஒற்றுமைன்னு நினைக்கிறேன்.)

19) எந்த மாதிரியான திரைப்படம் பிடிக்கும்?

படம் பார்ப்பதே மிக அரிது. சோகமான அழுவாச்சி படங்கள் அறவே பிடிக்காது. மற்றபடி தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எந்த படமாக இருந்தாலும் பார்ப்பேன்.

20) கடைசியாகப் பார்த்த படம்?

பசங்க

21) பிடித்த பருவ காலம் எது?

கோவையில் இருந்த வரை குளிர் காலம். சேலத்தில் நான்கு வருடங்களில் அப்படி ஒரு காலத்தையே பார்க்கவில்லை.

22) என்ன புத்தகம் படித்துக்கொண்டு இருக்கிறீர்கள்?

Tom Holt எழுதிய Overtime. அறிவியல் அல்லது கற்பனை மற்றும் காமெடி கலந்த புதினம் (science fiction, fantasy, comedy) பிடிக்கும்.

23) உங்கள் டெஸ்க்டாப்பில் இருக்கும் படத்தை எத்தனை நாளைக்கு ஒருமுறை மாற்றுவீர்கள்?

இருப்பது இந்தப்படம். மாற்றுவதில்லை.

24) பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?

சத்தமேயில்லாமல் அமைதியாக இருந்தால் பிடிக்கும். மழை விழும் சத்தம் பிடிக்கும். மருத்துவமனையில் குழைந்தைகள் வார்டில் அழுகை சத்தம் அறவே பிடிக்காது.

25) வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக தொலைவு?

சிகாகோ நகரம்.

26) உங்களிடம் ஏதாவது தனித்திறமை இருக்கிறதா?

எந்த ஒரு விஷயத்தையுமே கூர்ந்து ஆராய்ந்து பல கோணங்களில் பார்க்கும் பக்குவம் இருப்பதாக நம்புகிறேன். நண்பர்களும், மனைவியும் அதையே சொல்லுவார்கள். இது என் தொழிலுக்கு மிகவும் உதவுகிறது. இதை தனித்திறமை என்று சொல்லிக்கொள்ளமுடியுமா என்று தெரியவில்லை.

27) உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயம்?

சொன்ன சொல்லை காப்பாட்ற முடியவில்லை என்றாலும் தவறேதும் செய்யவில்லை என்பது போல் நடிப்பவர்களை.

28) உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

முன்கோபம்.

29) உங்களுக்குப் பிடித்த சுற்றுலாத் தலம்?

கோத்தகிரி. என் தாயார் பிறந்த ஊர்.

30) எப்படி இருக்கணும்னு ஆசை?

ஒழுக்கமாகவும் யதார்த்தவாதியாகவும்.

31) மனைவி இல்லாமல் செய்ய விரும்பும் காரியம்?

இதை போல் இணையத்தில் பல மணிநேரம் செலவழிப்பது.

32) வாழ்வு பற்றி ஒரு வரியில் சொல்லுங்க.

பிறருக்கு உதவாமல் வாழும் வாழ்க்கைக்கு அர்த்தமே இல்லை.

Loading mentions Retweet
Filed under  //   friends   meme   personal   tamil   twitter  

Comments [0]

an american newspaper feels more for suffering tamils than their own "leaders"

ONE OF THE WORLD'S longest, bloodiest conflicts is coming to a gruesome conclusion on the island nation of Sri Lanka. The United Nations estimates that some 6,500 civilians have died and 14,000 have been injured in the government's merciless offensive against the Tamil Tigers in the northeast of the country.

...governments, particularly India and China, should pressure both the Sri Lankan government and the Tigers to halt the fighting and permit trapped civilians to escape.

...humanitarian intervention would be more likely to succeed if the interveners make it clear that Sri Lankan government officials and Tiger leaders will be held responsible for war crimes and crimes against humanity. Accounts from refugees leave little doubt that both sides have perpetrated such crimes. It was probably to hide those crimes that Sri Lankan President Mahinda Rajapaksa and Defense Minister Gotabahaya Rajapaksa, his brother, banned international aid groups and independent journalists from the theater of war.

At a time when 100,000 refugees need medical care, food, and shelter, and another 50,000 are under shelling in a five-square-mile war zone, the international community has proved impotent to live up to the UN's 2005 adoption of a "right to protect" civilians who are not protected by their government. UN Secretary General Ban Ki-moon deserves credit for announcing Thursday that he was sending a humanitarian aid team to the war zone. "So many lives have been sacrificed," Ban said. "There is no time to lose." Welcome as the UN chief's humanitarian initiative must be, the sad truth is that it comes woefully late, after too much preventable human suffering.

The Rajapaksa brothers have been able to get away with their no-quarter assault on the Tigers, with all the collateral damage that entailed, because they dressed it up as a war against terrorists. Their propaganda has been effective because it is grounded in a half-truth. The Tigers have committed terrorist acts. But the overwhelming majority of the victims in the Rajapaksa brothers' war have been Tamil civilians. For more than a quarter century, successive Sri Lankan governments have refused to grant ethnic Tamils in the north and northeast of the country some form of autonomy or self-rule in a confederal state.

The Tigers may be crushed in the next few days. But the anger and alienation of the Tamil minority in Sri Lanka is more acute than ever. The ultimate solution for Sri Lanka's communal conflict can only be political, not military. If the Tamil populace sees no hope for autonomy within Sri Lanka, it may come to demand a separate state - after all, the secessionist goal of the Tigers.

[all emphases are mine]

a reminder that these are excerpts from an editorial in The Boston Globe, NOT from some rabid fanatic Tamil website.

it is sickening that tamil politicians who vie among themselves for the totally undeserved title of "leader of all tamils" do not have the moral courage to stand up for the rights of their brethren.

another reminder to all the well-meaning people in india (and abroad): support for the suffering sri lankan tamils DOES NOT EQUAL support for the murderous tamil tigers.

Loading mentions Retweet
Filed under  //   india   news   politics   rant   social commentary   tamil  

Comments [0]

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்



[Image Credit]

wishing all friends a happy new year

Loading mentions Retweet
Filed under  //   events   india   tamil  

Comments [0]

பிஞ்சிலே பழுத்த கேஸ்

UKG படிக்கும் பையன்: நான் ஸ்கூலுக்கு போகமாட்டேன்!
அம்மா: ஏன்டா கண்ணா?
பையன்: வேலை செய்ய போறேன்.
அம்மா: UKG படிச்சுட்டு என்ன வேலை செய்ய போறே?
பையன்: LKG பொண்ணுகளுக்கு ட்யுஷன் எடுக்க போறேன்!

Loading mentions Retweet
Filed under  //   humour   tamil  

Comments [0]

small world-ங்க

நன்பர் மறு. ப்ருனோ (@spinesurgeon) நான் கையெழுதிட்ட CT ஸ்கான் ரிபோர்ட் ஒன்றை சென்னையில் பார்த்ததாக இன்று காலை sms அனுப்பியிருந்தார். படங்கள் நன்றாக உள்ளன என்றும் குறிப்பிட்டிருந்தார்.

பார்த்ததும் சதி லீலாவதியில் மரு. சக்திவேல் கவுண்டர் (கமல்) சொல்ற "small world-ங்க" ஞயாபகம் வந்துச்சு :)
  

Loading mentions Retweet
Filed under  //   friends   india   medicine   personal   radiology   tamil   twitter  

Comments [0]