
Comments [3]
i'm constantly amazed at how something as frivolous as twitter can lead to some amazing stuff.
thanks to my twitter pal sridhar, i play an anonymous cameo role (a pivotal role, in his words) in an interesting short story that he wrote in his tamil blog. all thanks to a story of a rare heavy metal toxicity that i found in the new york times (via twitter again) that i tweeted about. it's a great story, a typical work of rajeshkumar style tamil pulp fiction.Comments [1]

a conversation on twitter (between saroj & i about this article in the ny times - see the screen grab) reminded me of something that happened years ago when i was in sixth standard, in my first year in boarding school.
one day a whole bunch of us were ordered to gather in the assembly hall after lunch. once there, we were told there was to be an audition to select new members for the school choir. the music teacher sang a short "aaaah" (is that called a chord or a tune?) and asked each of us to try and sing it in the same tune. my turn came in due course. i distinctly remember the dear lady's face twisting in horror within a few seconds of my attempt. she yelled out a tortured, "enough… next!!"that was the end of my budding musical career.Comments [1]
explanation for this tweet, which was in response to this one.
Comments [1]
1) உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?
என் இயற்பெயர் விஜய். சதாசிவம் என் தந்தையின் பெயர். பல வருடங்களுக்கு முன் பாஸ்போர்ட் எடுக்கும்போழுது இனைத்துவிட்டார்கள். விஜய் என்ற குறும்பெயரைவிட வடநாட்டவர் மற்றும் மேலைநாட்டவர்கள் போல் இரண்டு பெயர்காளாக இருப்பது பிடித்திருக்கிறது. எப்போதாவது தொலைபேசியிலோ அல்ல மருத்துவ கூட்டங்களிலோ டாக்டர் சதாசிவம் என்று யாரவது கூப்பிட்டால் வேறு யாரையோ கூப்பிடுவதாக எண்ணியதுண்டு. ஸ்கென்மென் (scanman) நான் வலைப்பதிவு எழுத ஆரம்பித்தபொது வைத்துக்கொண்ட என் தொழிலை குறிக்கும் புனைப்பெயர்.
2) கடைசியா அழுதது எப்போது?
இது என்னங்க கேள்வி! கடைசியா அழுதது பொண்டாட்டி கிட்ட கடைசியா அடி வாங்கிய நாள்தான்!!
3) உங்களுக்கு உங்க கையெழுத்து பிடிக்குமா?
மை உற்றி எழுதும் பேனா அல்லது ஜெல் பேனாவில் எழுதினால் என் கையெழுத்து பார்க்கும்படியாக இருக்கும். பிடிக்கும்.
பால்பாயின்ட் பேனாவில் எழுதினால் சராசரி மருத்துவரின் கையெழுத்து (அதாவது கோழி கிருக்கல்) ஆகிவிடும். பிடிக்காது.
4) பிடித்த மதிய உணவு?
சாதம், முருங்கைக்காய் சாம்பார், தக்காளி ரசம், கீரை, கொஞ்சம் தயிர், மாங்காய் அல்லது மிளகாய் உருகாய். முடித்தபின், மனைவி அனுமதித்தால் எதாவது ஒரு இனிப்பு. கடலை மிட்டாய் அல்லது தேன் மிட்டாயாக இருந்தால் இன்னும் சந்தோசம்.
5) நீங்க வேற யாருடனாவது நட்பு வெச்சுக்குவீங்களா?
எனக்கு இந்த கேள்வி சரியாகப் புரியவில்லை. முன்பின் தெரியாதவர்களுடன் கூட வலிய போய் பேசி பழகுவேன்.
6) கடல்ல குளிக்கப் பிடிக்குமா? அருவியில குளிக்கப் பிடிக்குமா?
எனக்கு நீச்சல் தெரியாது. அதனால் குளம், குட்டை, ஓடும் நதி, கடல் என்று எதை பார்த்தாலும் குளிக்க தோன்றாது. குளியலறையில் மட்டுமே குளியல்.
7) ஒருவரைப் பார்க்கும்போது முதலில் எதைக் கவனிப்பீர்கள்?
முதலில் கவனிப்பது முக பாவங்களை. என் பார்வைக்கு கோபமாக அல்ல அலட்சியமாக தெரிந்தால் அவர்களுடன் தேவைக்கு ஏற்றமாதிரி மட்டும் பேச்சு வைத்துக்கொள்வேன்.
8) உங்க கிட்ட உங்களுக்குப் பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?
பிடித்தது என்று குறிப்பிட்டு சொல்ல ஒன்றும் இல்லை. பிடிக்காதது பல. அதில் மிக முக்கியமாக பிடிக்காதது என்னுடைய முன்கோபமும் சோம்பேறித்தனமும்.
9) உங்கள் துணைவி கிட்டே உங்களுக்குப் பிடிச்ச/பிடிக்காத விஷயம்?
பிடித்தது - என் மனைவின் சிரித்த முகமும், மருத்துவமனையில் நோயாளிகளோடு இனிமையாகவும் இயல்பாகவும் பழகும் விதம். [சிரிப்பும் இனிமையும் என்னைபார்த்ததும் காணாமல் போய்விடுவதேன்னமோ உண்மைதான்]
பிடிக்காதது - சரியாக படிப்பதில்லை என்று குழந்தையை திட்டுவது.
10) இப்போ யார் பக்கத்துல இல்லாம போனதுக்கு வருந்துகிறீர்கள்?
தற்பொழுது ஆஸ்திரேலியாவில் இருக்கும் என் நண்பன் ஷ்யாம். மருத்துவக்கல்லுரியில் ஐந்தரை ஆண்டுகளும் அதற்குப்பின் கோவையில் ஐந்து ஆண்டுகளும் உயிர்தொழர்களாக இருந்த ஞாபகங்கள் தான் மிச்சம் இப்போது.
11) இதை எழுதும்போது என்ன நிறத்தில் ஆடை அணிந்துள்ளீர்கள்?
இளம் பச்சை சட்டையும் கருப்பு ஜீன்சும் (ஞாயிற்றுக்கிழமை அதனால் ஜீன்ஸ்).
12) என்ன பார்த்து/கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்?
வீட்டில் அம்மா, மனைவி மற்றும் மகள் செய்வதையும் சொல்வதையும் வேடிக்கைபார்த்துக்கொண்டும் கேட்டுக்கொண்டும் தமிழ் அஞ்சல் + Google transliterate உதவியுடன் எழுதிக்கொண்டிருக்கிறேன்.
13) வர்ணப் பேனாவாக உங்களை மாற்றினால், என்ன நிறப் பேனாவாக மாற ஆசை?
கருப்பு.
14) பிடித்த மணம்?
எலுமிச்சம்பழத்தின் மனம்.
15) நீங்கள் அழைக்கப்போகும் பதிவரிடம் உங்களுக்குப் பிடித்த விஷயம்? அவரை நீங்கள் அழைக்கக் காரணம் என்ன?
நான் அழைக்கபோகும் பதிவர், எனக்கு ட்விட்டரில் அறிமுகமான எங்கூர்க்காரர் டைனொ. அவரிடம் எனக்கு பிடித்தது இரண்டு விஷயங்கள். இரண்டுமே ட்விட்டரில் பார்த்தது. முதலாவது - இந்திய அல்லது அமேரிக்க அரசியலாகட்டும், சினிமாவாகட்டும், இசையாகட்டும், எதுவாக இருந்தாலும் அவருடைய சமயோசிதமான, இரத்தினசுருக்கமான எண்ணங்கள் (ட்விட்டரில் வேறேதும் முடியாதுங்கறது வேறு விஷயம்). முக்கியமாக இரண்டாவது - இந்த தொடர்பதிவு விளையாட்டை அவர் விளையாடாமல் என் பக்கம் square cut அடித்து விட்டது! Well played, sir :)
இன்னொரு காரணம், ரொம்ப நாளாக அவரது posterous பதிவில் ஒன்றுமே எழுதாமல் இருக்கிறார்.
16) உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவுகளில் உங்களுக்குப் பிடித்த பதிவு?
மேலெ 15-ம் கேள்விக்கு நான் எழுதியிருக்கும் பதிலின் கடைசி வரியை பார்க்கவும்.
17) பிடித்த விளையாட்டு?
நான் படித்த பள்ளிகளிலும், மருத்துவக்கல்லுரியிலும் outstanding player-ன்னு பெயரெடுத்தவன் நான். ஒரு விளையாட்டும் ஒழுங்காக விளையாடத்தேரியாது. தொலைக்காட்ச்சியில் எல்லா விளையாட்டுகளையும் பார்க்க பிடிக்கும். சுத்தமாக புரியாத, பிடிக்காத விளையாட்டு என்று கேட்டால் அமெரிக்காவில் football என்று பெயரிட்டு நடக்கும் fancy dress போட்டி.
18) கண்ணாடி அணிபவரா?
ஆம். சோடாபுட்டி. ஆறாம் வகுப்பிலிருந்து. (இது அப்படியே பாராவின் பதிவிலிருந்து ஈயடிச்சான் காப்பி அடித்தது. எங்களுக்குள் இருக்கும் ஒரே ஒற்றுமைன்னு நினைக்கிறேன்.)
19) எந்த மாதிரியான திரைப்படம் பிடிக்கும்?
படம் பார்ப்பதே மிக அரிது. சோகமான அழுவாச்சி படங்கள் அறவே பிடிக்காது. மற்றபடி தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எந்த படமாக இருந்தாலும் பார்ப்பேன்.
20) கடைசியாகப் பார்த்த படம்?
பசங்க
21) பிடித்த பருவ காலம் எது?
கோவையில் இருந்த வரை குளிர் காலம். சேலத்தில் நான்கு வருடங்களில் அப்படி ஒரு காலத்தையே பார்க்கவில்லை.
22) என்ன புத்தகம் படித்துக்கொண்டு இருக்கிறீர்கள்?
Tom Holt எழுதிய Overtime. அறிவியல் அல்லது கற்பனை மற்றும் காமெடி கலந்த புதினம் (science fiction, fantasy, comedy) பிடிக்கும்.
23) உங்கள் டெஸ்க்டாப்பில் இருக்கும் படத்தை எத்தனை நாளைக்கு ஒருமுறை மாற்றுவீர்கள்?
இருப்பது இந்தப்படம். மாற்றுவதில்லை.
24) பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?
சத்தமேயில்லாமல் அமைதியாக இருந்தால் பிடிக்கும். மழை விழும் சத்தம் பிடிக்கும். மருத்துவமனையில் குழைந்தைகள் வார்டில் அழுகை சத்தம் அறவே பிடிக்காது.
25) வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக தொலைவு?
சிகாகோ நகரம்.
26) உங்களிடம் ஏதாவது தனித்திறமை இருக்கிறதா?
எந்த ஒரு விஷயத்தையுமே கூர்ந்து ஆராய்ந்து பல கோணங்களில் பார்க்கும் பக்குவம் இருப்பதாக நம்புகிறேன். நண்பர்களும், மனைவியும் அதையே சொல்லுவார்கள். இது என் தொழிலுக்கு மிகவும் உதவுகிறது. இதை தனித்திறமை என்று சொல்லிக்கொள்ளமுடியுமா என்று தெரியவில்லை.
27) உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயம்?
சொன்ன சொல்லை காப்பாட்ற முடியவில்லை என்றாலும் தவறேதும் செய்யவில்லை என்பது போல் நடிப்பவர்களை.
28) உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
முன்கோபம்.
29) உங்களுக்குப் பிடித்த சுற்றுலாத் தலம்?
கோத்தகிரி. என் தாயார் பிறந்த ஊர்.
30) எப்படி இருக்கணும்னு ஆசை?
ஒழுக்கமாகவும் யதார்த்தவாதியாகவும்.
31) மனைவி இல்லாமல் செய்ய விரும்பும் காரியம்?
இதை போல் இணையத்தில் பல மணிநேரம் செலவழிப்பது.
32) வாழ்வு பற்றி ஒரு வரியில் சொல்லுங்க.
பிறருக்கு உதவாமல் வாழும் வாழ்க்கைக்கு அர்த்தமே இல்லை.
Comments [0]
as done by me following @tbtam's instructions…
i used regular store-bought white bread; the lid of a small tin for cutting a hole in the bread and a bit of ghee for frying the bread & egg.
added the bread to the pan first, turned it around a couple of times and then added the egg.
the yolk broke.
since the plan was to give this to my daughter, and as she doesn't like runny eggs, i turned the bread over.
the ding-ding [read Margaret's (@tbtam) post for the explanation] was fried along with the bread & egg and served with tomato chutney.
included a picture of the back, which looks better than the front of my masterpiece.
ps. my daughter loved it.
Comments [5]
this was too good to miss!
…
the magical surgeon Merlin is obviously @Bongi1
who could the dragon nurse be? @Emergiblog or @MotherJonesRN or @Geek2Nurse? of course, the reason i'm brave enough to suggest this is because i'm thousands of miles away ;)
@sterileye probably designed the lighting contraption!
the surgeon's star-spangled cape and robe are obviously @rlbates' handiwork.
…
and who could the vampire "suction" be? a medmal attorney tweep? or a health insurance tweep?
…
check out the red cross on the castle keep!
…
footnote: for those interested; Merlin is operating on Thor to remove a kidney stone - the pre-op story can be seen here, here and here.
Comments [3]
Comments [0]